மலையகத்தில் கர்ப்பிணிகள் போஷாக்குக் குறைபாட்டினால் பாதிப்பு

பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த மூன்றிலொரு கர்ப்பிணிகள் போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகஇ ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜயரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே,அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகள் தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ள நிலைமையிலுள்ளதாகவும்,அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான வைத்தியசாலைகள் தற்போது மிகவும் மோசமாகக் காணப்படுவதோடு,அவை மூடப்படும் நிலையிலும் உள்ளன. அங்கு வைத்தியசாலைகளில்  மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு பற்றாக்குறை காணப்படுவதோடு,இப்பற்றாக்குறை காரணமாக மருந்தாளர்களே மருத்துவத்துறை அதிகாரிகளாகவும் கடமையாற்ற நேரிட்டுள்ளது' என்றார்.  

இதேவேளை,தோட்டத் தொழிலாளர்கள் வீடுகளைக் கட்டுவதற்காக  ஒவ்வொரு வீட்டுக்கெனவும் 7 பேர்ச் காணி வழங்கப்பட்டபோதும்,இத்தகைய காணிகளின் உரிமை பற்றி பிரச்சினைகள் எழுந்துள்ளன.  ஆகையால்,தோட்டத் தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்த காணி உறுதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தோட்டத் தொழிற்றுறை அமைச்சரிடம் தான் கேட்டுக்கொள்வதாகவும்,அவர் கூறினார்.

Thu, 04/04/2019 - 16:31


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை