கொலம்பிய நிலச்சரிவு: 17 பேர் உயிரிழப்பு

தென்மேற்கு கொலம்பியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிலச்சரிவில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கெளகா பிராந்தியத்தின் ரொசாஸ் நகரில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் பல வீடுகளும் சோதமடைந்திருப்பதோடு மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

பிராந்தியத்தில் ஏற்பட்ட கடும் மழையை அடுத்தே இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடிபாடுகளில் தொடர்ந்தும் தேடுதல் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் நேற்று குறிப்பிட்டனர். ஆண்டின் மழை பருவ காலங்களில் லத்திக் அமெரிக்க நாடுகளில் நிலச்சரிவுகள் பொதுவாக இடம்பெறுகின்றன. “அதிகம் எதிர்பாராத நேரத்திலேயே இது நிகழ்ந்துள்ளது” என்று அந்த நகர மேயர் ஜேசூஸ் டயஸ் குறிப்பிட்டுள்ளார்.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை