சகலதுறை வீரராக செயல்பட்ட ரொஷான் ஜுரம்பதி

ஒப்சேர்வர் – மொபிடெல் வருடத்தின் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் போட்டி ஆரம்பித்து 4 தசாப்தங்கள் ஆகின்றன. சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்து இந்த போட்டி பெருமை கொள்கிறது.

இந்த பிரபலமான விருதின் முதல் வெற்றியாளர் என்ற பெருமைய ரஞ்சன் மடுகல்ல பெறுகிறார். 1978/1979 இல் அவர் இந்த விருதை தொடர்ந்து இரண்டு முறை பெற்றார். அப்போது அவர் ரோயல் கல்லூரியின் தலைவராக இருந்தார். அதனையடுத்து 1980/1982 இல் ஆனந்த கல்லூரியின் அர்ஜுன ரணதுங்க, ரொஹான் பில்ஜன்ஸ் (சென் பீட்டர்ஸ்) ரொஷான் மஹானாம (1983/1984) மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் இந்த விருதை வென்றனர்.

இதற்கிடையே 1986 இல் ரோயல் கல்லூரியின் ரொஷான் ஜுரம்பத்தி இந்த விருதை வென்றார். அந்த சமயம் அதிரடி துடுப்பாட்ட வீரராகவும் நல்ல ஒப் ஸ்பின் பந்து வீச்சாளராகவும் இருந்த அவர் இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்தார். அவர் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளராகவும் இருந்த அவர் இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்தார்.

அவர் ஒரு ஸ்பின் பந்து வீச்சாளர் என்ற வகையிலேயே இலங்கை அணியில் இடம்பிடித்தார். எனினும் அவர் ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்.

இலங்கைக்காக விளையாடிய நான்காவது வயது குறைந்த வீரர் ஜுரம்பத்தி ஆவார். எனினும் அவரால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. அதன் பின தேர்வுக்குழு

அவரை ஓரங்கட்டிவிட்டது.

அவர் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் அவரது பங்களிப்பு சிறப்பாக அமையவில்லை எனினும் அவருக்கு இன்னும சில வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால் அவர் ஒரு நல்ல சகலதுறை ஆட்டக்காரராக பரிணாமித்திருக்கலாம். எனினும் இலங்கையின் 23 வயதுக்கு கீழ்ப்பட்டோர் அணியில் விளையாடிய ஜுரம்பத்தி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் திறமையாக விளையாடினார்.

17 வருடம் 342 நாட்களில் என்ற இளம் வயதில் முதல்தர சதம் ஒன்றை அடித்த வயது குறைந்த வீரர் இவராவார். எனினும் பாடசாலை வீரராக இருந்து டெஸ்ட் விளையாட்டில் இறங்குவதற்கு, அவர் சிரமப்பட்டார் என்றே கூறவேண்டும். அதேநேரம் அவரது முதலாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு போதிய அளவு பந்து வீச்சு தரப்படவில்லை என்று கூறமுடியும்.

தேர்வுக் குழுவினால் ஓரங்கட்டப்பட்டதை யடுத்து ஜுரம்பத்தி மேற்கு அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட்டைத் தொடர தீர்மானித்தார்.

ஒப்சேர்வர் விருதை வென்ற முதலாவது பாடசாலை வீரரான ரஞ்சன் மடுகல்ல இலங்கை கிரிக்கெட் அணிக்கு தலைமைதாங்கும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார். அத்துடன் நின்றுவிடாமல் சர்வதேச கிரிக்கெட் சபையின் பிரதான போட்டி தீர்ப்பாளர் என்ற பதவியையும் அவரால் பிடிக்க முடிந்துள்ளது.

மடுகல்லவுக்கு அடுத்ததாக இந்த விருதை வென்றவர் அர்ஜுன ரணதுங்க, அவர் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியது மட்டுமன்றி 1996 இல் இலங்கை அணிககாக உலக கிணணத்தையும் வென்றுகொடுத்தார்.

அத்துடன் ஒப்சேர்வர் விருது பெற்ற பின் இலங்கை அணியில் இடம்பிடித்து அசத்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் முடிந்துவிடவில்லை.

அடுத்து இந்த பட்டியலில் இருப்பவர் உலக சாதனை வீரர் முத்தையா முரளிதரன், இலங்கை அணியின் முன்னாள் தலைவரும்ம் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் 1996 உலக கிண்ண சுற்றுப் போட்டியில் அதிக பெறுமதியுடன் கூடிய வீரர் என்று கணிக்கப்பட்டவருமான சனத் ஜயசூரிய முன்னாள் இலங்கை தலைவரும் தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருமான மார்வன் அத்தபத்து (1999) முன்னாள் இலங்கை தலைவரும், முன்னாள் சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டித் தீர்ப்பாளருமான ரொஷான் மஹானாமை, முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போதைய இலங்கை அணியின் முகாமையாளருமான அசங்க குருசிங்க, முன்னாள் இலங்கை வீரரும் சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறப்பு பட்டியல் நடுவருமான குமார தர்மசேன, இலங்கை அணியின் முன்னாள் வீரரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளருமான நிலான் சமரவீர ஆகியோர் ஒப்சேர்வர் விருது வென்று பெருமை கொண்ட பிரபலங்களாவர்.

தற்போதைய இலங்கை அணியில் விளையாடும் மூன்று வீரர்கள் ஒப்சேர்வர் விருது வென்றவரகள். டி20 தலைவர் தினேஷ் சந்திமால், (2009) (ஆனந்த) நிரோஷன் டிக்வெல்ல (2010)(திரித்துவ கல்லூரி) குசல் மெண்டிஸ் (2013)(பிரின்ஸ் ஒப் வேல்ஸ்) ஆகியோரே இப்போதைய அணியில் விளையாடும் வீரர்கள் ஆவர்.

நிரோஷன் டிக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் முறையே 2012 இலும் 2013 லும் ஒப்சேர்வர் விருது வென்ற இளம் வீரர்கள். விருதை வென்ற சில வருடங்களில் அவர்கள் தேசிய அணியில் இடம்பிடித்ததுடன் தமது இடங்களை தக்கவைத்துக்கொண்டும் உள்ளனர்.

ஒப்சேர்வர் விருது பெற்ற மேற்படி பிரபலங்களைத் தவிர இலங்கை அணிக்கு தெரிவாகி தமது திறமைகளை காட்டிய மேலும் பல வீரர்கள் உள்ளனர். (1981) ரொஹான் வீரக்கொடி (சென் ஜோசப்ஸ்) 1987, சஞ்சீவ ரணதுங்க (ஆனந்த) 1988, சஜித் பெர்னாண்டோ (சென் அந்தனீஸ்) கட்டுகொஸ்தோட்டை) 1992, நவீட் நவாஸ் (டீ. எஸ். சேனநாயக்க) 1993, திமேஷ் பெரேரா (சென் செபஸ்டியன்ஸ்) 1996, சிந்தக ஜயசிங்க (தர்மபால) 1997, பிரதீப் ஹேவகே (சென் பெனடிக்ட்) 1998, முத்து முதலிகே புஷ்பகுமார (ஆனந்த) 1999 கௌசல்ய வீரரத்ன (திரித்துவக் கல்லூரி) 2000, கௌசல் லொக்கு ஆரச்சி (சென் பீ்ட்டர்ஸ்) 2001, சஹன் விஜேரத்ன (பிரின்ஸ் ஒப் வேல்ஸ்) 2002, பர்வீஸ் மஹ்ரூப் (வெஸ்லி) 2003, லஹிரு பீரிஸ் (சென் பீட்டர்ஸ்) 2004 மற்றும் 2005 கியான் ரூபசிங்க (நாலந்த 2006, மலித் குணதிலக்க (ஆனந்த) 2007, உமேஷ் கருணாரத்ன (தேர்ஸ்டன்) 2008, பானுக) ராஜபக்ஷ (ரோயல்) 2010 மற்றும் 2011, சதீர சமரவிக்ரம (சென் ஜோன்ஸ்) 2014 மற்றும் அஷித அசலங்க (ரிச் மன்ட்) 2015 மற்றும் 2016.

அசலங்க தொடர்ந்து இரண்டு பெரிய விருதுகளை தொடர்ச்சியாக வென்றது இவ்வருட முற்பகுதியில் இலங்கை ஏ அணிக்காக இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிராக பல்லேகலையில் விளையாடினார்.

சஞ்சீவ ரணதுங்கவும் இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடியவர் 9 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தம் 531 ஓட்டங்களை பெற்றார். அதில் இரண்டு சதங்கள் அடங்குகின்றன. அத்துடன் அவர் இலங்கைக்காக 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 2 அரைச் சதங்கள் பெற்றுள்ளார்.

அதேநேரம் இலங்கை அணியில் விளையாடிய ஒப்சேர்வர் விருதுவென்ற வீரர்களில் பர்வேஸ் மஹரூப் 22 டெஸ்ட்களிலும் 109 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். முது முதலிகே புஷ்பகுமார மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் கௌசால் லொக்க ஆரச்சி நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் 21 ஒரு நாள் போட்டிகளிலும், கௌசல்ய வீரரத்ன 15 ஒரு நாள் போட்டிகளிலும் ஐந்து ரி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.

Fri, 03/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை