இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்க நாடு திரும்பினார்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சந்திக ஹத்துருசிங்கவை தென்னாபிரிக்க அணியுடனான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பிறகு மீண்டும் இலங்கைக்கு திரும்புமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

தென்னாபிரிக்கஅணியுடன் நடைபெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட ரி-20 தொடரில் இலங்கைஅணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளராக களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரான ஸ்டீவ் ரிக்சன் செயற்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்கு வழங்பப்படுகின்றமிகப் பெரியசம்பளமாக 9 கோடி ரூபாய்க்கு சந்திக்க ஹத்துருசிங்க கடந்தவருடம் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகஒப்பந்தம் செய்யப்பட்டார். எனினும்,அவரதுபயிற்றுப்பின் கீழ் கடந்த 15 மாதங்களில் இலங்கைஅணிபங்கேற்றிருந்த 23 ஒருநாள் போட்டிகளில் 6 இல் மாத்திரமே வெற்றிகொண்டது. அதில் ஆப்கானிஸ்தான் அணியுடனான தோல்வியும் அடங்கும்.

கடந்த ஒன்றரை வருடங்களில் இடம்பெற்ற பெரும்பாலான போட்டித் தொடர்களில் இலங்கை அணி படுதோல்வியைசந்தித்து இருந்ததுடன், இதுதொடர்பில் பயிற்றுவிப்பாளர் ஹத்துருசிங்கவுக்கு எதிராக பலகுற்றச்சாட்டுகளும்,விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.

குறித்த விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மிசில்வாகருத்துவெயியிடுகையில்,எதிர்வரும் 16ஆம் திகதிகேப்டவுனில் நடைபெறவுள்ள 5ஆவதும், இறுதியுமானஒருநாள் போட்டிக்குப் பிறகுசந்திக்க ஹத்துருசிங்கவைநாடுதிரும்புமாறுஆலோசனைவழங்கியுள்ளதாகஅவர் தெரிவித்தார்.

மேலும்,எதிர்வரும் உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ளதிட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே அவரைநாட்டுக்கு திரும்புமாறு அழைப்புவிடுத்தோம். உண்மையில் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் கடந்தகாலங்களில் பெரும்பாலானபோட்டிகளில் நாம் தோல்வியைத் தழுவினோம். ஆனால் அவரை நாடு திரும்புமாறுதிடீரென அழைப்புவிடுத்ததுஅவரைபயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு அல்ல.

ஏனெனில் கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றபிறகு அவரை நாங்கள் சந்திக்கவில்லை. அதேபோல,தென்னாபிரிக்காவுடனான போட்டித் தொடர் நிறைவடைந்தகையோடு விடுமுறைக்காக அவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளார். அதேபோல,உலகக் கிண்ணப் போட்டிகள் வரைஎமக்கு எந்தவொரு சர்வதேசப் போட்டியும் இல்லை. எனவேஉலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாடுவதற்கு நிறையவிடயங்கள் உள்ளன. இவ்வாறுஅவரைஅழைத்துபேசினால்தான் எமக்கும் இலகுவாக இருக்கும். அத்துடன்,தென்னாபிரிக்காவுடனான விளையாடுவதற்கு ரி -20 போட்டிகளே எஞ்சியுள்ள நிலையில்,அவருடைவருகை எந்த விதத்திலும் பாதிப்பினைஏற்படுத்தாது. மேலும்,குறித்தவிடயம் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பீ.எப் மொஹமட்

Sat, 03/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை