இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: நடால், பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினார்கள்.

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், 3 முறை சம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் கிராஜ்னோவிச்சை (செர்பியா) தோற்கடித்து கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் கரன் கச்சனோவ் 6-4, 7-6, (7-1) என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சாய்த்து காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். காலிறுதியில் கரன் கச்சனோவ், ரபேல் நடாலை சந்திக்கிறார்.

இன்னொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 6-1, 6-4 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீரரான கைல் எட்முன்டை (இங்கிலாந்து) விரட்டியடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியை பெற அவருக்கு ஒரு மணி நேரமே தேவைப்பட்டது. மற்ற ஆட்டங்களில் பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் 6-0, 6-2 என்ற நேர்செட்டில் கோல்ஸ்கிரீபரையும் (ஜெர்மனி), ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் 6-4, 6-3 என்ற நேர்செட்டில் கார்லோவிச்சையும் (குரோஷியா), கனடாவின் மிலோஸ் ராவ்னிக் 6-4, 6-3 என்ற செட்டில் ஜான் லினார்ட் ஸ்டிரப்பையும் (ஜெர்மனி), போலந்து வீரர் ஹூபர்ட் ஹர்காக்ஸ் 7-6 (7-3), 2-6, 6-3 என்ற செட் கணக்கில் டேனிஸ் ஷபலோவையும் (கனடா) தோற்கடித்து காலிறுதியை எட்டினர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவரும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) 0-6, 1-6 என்ற நேர்செட்டில் 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்குவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 52 நிமிடம் நடந்தது.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் மார்கெடா வோன்ட்ரோசோவாவை (செக் குடியரசு) வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

Sat, 03/16/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக