ஐன்ஸ்டைனின் எழுத்து பிரதிகள் கண்காட்சி

காலஞ்சென்ற அறிவியல் மேதை அல்பர்ட் ஐன்ஸ்டைன் கைப்பட எழுதிய, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 100க்கும் மேலான எழுத்துப்பிரதிகள் இஸ்ரேலின் ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

1944ஆம் ஆண்டுக்கும், 1948ஆம் ஆண்டுக்கும் இடையில் அவர் கையால் எழுதிய கணிதக் குறிப்புகளும் அவற்றில் அடங்கும்.

1930ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் வெளியிட்ட முக்கிய அறிவியல் ஆவணமும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தொலைந்துபோனதாகக் கருதப்பட்ட அந்த ஆவணக் குறிப்பு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவின் சிக்காகோவிலுள்ள அறநிறுவனம் ஒன்று, வட கரோலினாவைச் சேர்ந்த ஆர்வலர் ஒருவரிடமிருந்து அதை விலைக்கு வாங்கி நன்கொடையாய் வழங்கியதாகப் பல்கலைக்கழகம் கூறியது. அவற்றுடன் தற்போது ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் அறிவியல் மேதை ஐன்ஸ்டைனுடன் தொடர்புடைய சுமார் 80ஆயிரம் பொருட்கள் உள்ளன.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை