15 வயது பலஸ்தீன சிறுவன் இஸ்ரேலால் சுட்டுக் கொலை

காசாவின் கிழக்காக இஸ்ரேல் எல்லை வேலிக்கு அருகில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 15 வயது பலஸ்தீன சிறுவன் ஒருவன் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். சைபல்தீன் அபூ செயித் என்று அடையாளம் காணப்பட்டிருக்கும் அந்த சிறுவனின் தலை மீது இஸ்ரேலிய ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலுக்கு இலக்கான மேலும் ஆறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷிபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

‘இரவு தொந்தரவுப் பிரிவு’ என்று அழைத்துக் கொள்ளும் பலஸ்தீன இளைஞர்கள் கடந்த பெப்ரவரி தொடக்கம் ஒவ்வொரு இரவும் இஸ்ரேலிய எல்லையில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமது பூர்வீக பூமிக்கு திரும்பும் உரிமையை கோரும் இந்த ஆர்ப்பாட்டங்கள் கடந்த ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்டதாகும். இந்த ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 260க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா ஆர்ப்பாட்டங்களில் இஸ்ரேல் மனித குழத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டும் ஐ.நா அறிக்கை ஒன்று கடந்த வாரம் வெளியானது.

Fri, 03/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை