உலகின் பெரிய டைனோசர் டீ ரெக்ஸ்

கனடாவின் மேற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட டீ ரெக்ஸ் டைனோசரே உலகின் மிகப் பெரிய டைனோசர் என்பது தெரியவந்துள்ளது. ஸ்கொட்டி எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த டைனோசரின் தொல்படிமம் 1991இல் கண்டுபிடிக்கப்பட்டது. டைனோசரின் எலும்புகள் மீது படிந்திருந்த மணற்கல்லை அகற்றி அதற்கு முழு வடிவம் கொடுக்கும் பணி சில பத்தாண்டுகள் நீடித்தது. அதனால் இதுவரை அதன் உண்மையான அளவை ஆய்வாளர்களால் தீர்மானிக்க முடியவில்லை.

ஸ்கொட்டி 13 மீற்றர் நீளமும் 8,800 கிலோகிராம் எடையும் கொண்ட மாபெரும் உயிரினம் என்பது இப்போது தெளிவாகி உள்ளது. அதன் மூலம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இறைச்சி உண்ணும் டைனோசர்களில் இதுவே மிகப் பெரியது என்பது உறுதியாகியுள்ளது.

Mon, 03/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை