இனவாதம் பேசிய அவுஸ்திரேலிய அரசியல்வாதி மீது முட்டை வீச்சு

நியூஸிலாந்து கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதலுக்கு இனவாத கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் மீது பதின்ம வயது சிறுவன் ஒருவன் முட்டை வீசி தாக்கியுள்ளான்.

முஸ்லிம் வெறியர்கள் நாட்டுக்குள் நுழைவதை அனுமதிக்கும் நியூசிலாந்து குடியேற்றக் கொள்கையே இந்தத் தாக்குதலுக்கு முதல் காரணம் என்று செனட்டர் பிரேசர் அன்னிங் மெல்பேர்னில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார். அப்போது அந்த சிறுவன் ஒரு கையால் கைபேசியை உயர்த்்தியபடி மறு கையால் அரசியல்வாதியின் தலையின் பின்புறத்தில் இருந்து முட்டையால் ஓங்கி அடித்தான். இதனைத் தொடர்ந்து அந்த அரசியல்வாதி சிறுவனை தாக்கிய நிலையில் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த சிறுவன் பின்னர் விடுவிக்கப்பட்டான்.

வீடியே சமூகதளத்தில் பிரபலம் அடைந்த நிலையில் அந்த அரசியல்வாதியின் கருத்துக்கு கடும் விமர்னங்கள் எழுந்துள்ளன.

Mon, 03/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை