சாய்ந்தமருது பிரதேச விளையாட்டு சங்கத் தலைவராக றியாத் ஏ. மஜீத்

சாய்ந்தமருது பிரதேச விளையாட்டுச் சங்கத்தின் தலைவராக சமுர்த்தி உதவி முகாமையாளர் றியாத் ஏ. மஜீத் தெரிவானார்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் கிராமமட்ட விளையாட்டு அபிவிருத்தியை இலக்காக வைத்து சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் பிரதேச விளையாட்டுச் சங்கங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதேச விளையாட்டுச் சங்க அங்குரார்ப்பன கூட்டமும் நிர்வாகத் தெரிவும் திங்கட்கிழமை (05) சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், சமுர்த்தி வலய உதவி முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

செயலாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.நளீம், பொருளாளராக சமுர்த்தி வங்கி முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ், பிரதித் தலைவராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல்.ஜஃபர், உதவிச் செயலாளராக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஜாபீர் ஆகியோர் தெரிவாகினர்.

பிரதேச விளையாட்டுச் சங்கத்தின் ஆலோசகர்களாக பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் மற்றும் சமுர்த்தி தலைமையக சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் செயற்படுவர்.

Wed, 03/13/2019 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை