மாலபே –புறக்கோட்டை இலகு ரயில் சேவை: ஏப்ரலில் கட்டுமானப்பணி ஆரம்பம்

மாலபேக்கும் புறக்கோட்டைக்கிடையிலான இலகு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான முதற்கட்ட கட்டுமானப்பணி அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மாலபே –-புறக்கோட்டைக்கிடையிலான இலகு ரயில் சேவையை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் ஜப்பான் அரசாங்கத்துடன்  அண்மையில் கைச்சாத்தானதைத் தொடர்ந்து, அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, இந்தத் திட்டத்திற்காக 2,200மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளதுடன், இந்தத் திட்டத்திற்கு 1,850மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஜய்கா நிறுவனம் வழங்குகின்றது என்றார். 

மேலும், மாலபே –புறக்கோட்டைக்கிடையில் 17கிலோமீற்றர் நீளமான ரயில் பாதை அமைக்கப்படுமென்பதுடன், 16ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இதன் கட்டுமாணப்பணி எதிர்வரும் 2024ஆம் ஆண்டளவில் பூர்த்தியடையும்.

மாலபே –புறக்கோட்டைக்கிடையிலான இலகு  ரயில் பயணத்திற்கு 32 நிமிடங்கள் மாத்திரமே பிடிக்குமென்பதுடன், இதற்குரிய பயணக் கட்டணமாக 100 ரூபாவை அறவிடத் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Thu, 03/14/2019 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை