இலங்கை அணி தொடர் தோல்வி

தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் 71 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 0–3 என இழந்தது.  

டர்பனில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் 332 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 16 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டது.  

நீண்ட நேர தாமதத்திற்கு பின்னர் ஆரம்பமான போட்டியில் டக்வர்த் லுவிஸ் முறையில் இலங்கை அணிக்கு 24 ஓவர்களில் 193 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் இலங்கை அணி 8 ஓவர்களில் 118 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது.  

ஆரம்பத்தில் இலக்கை நோக்கி அதிரடியாக ஆட முயன்போதும் விக்கெட்டுகள் பறிபோனதால் இலங்கை அணியால் தொடர்ந்து வேகமாக ஆட முடியாமல்போனதும்  

இதனால் இலங்கை அணி 24 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த 121 ஓட்டங்களையே பெற்றது. அதிரடியாக ஆட முயன்ற குசல் மெண்டிஸ் 31 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 41 ஓட்டங்களை பெற்றார்.  

தென்னாபிரிக்க அணி சார்பில் இம்ரான் தாஹிர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட தென்னாபிரிக்க அணிக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டி கொக் 121 ஓட்டங்களை பெற்றார். இந்த ஓட்டங்களை பெற அவர் 108 பந்துகளில் 16 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். இலங்கை சார்பில் இசுரு உதான 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.  

இந்தப் போட்டியில் கமிந்து மெண்டிஸ் தனது கன்னி ஒருநாள் போட்டியில் ஆட களமிறங்கி இருந்தார். 10 ஓவர்களையும் வீசிய அவர் 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.   இரு அணிகளுக்கும் இடையிலான 4ஆவது ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை போர்ட் எலிசபத்தில் நடைபெறவுள்ளது.      

Mon, 03/11/2019 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை