வெள்ளை தேசியவாதத்திற்கு பேஸ்புக் சமூகதளத்தில் தடை

வெள்ளை தேசியவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் பக்கங்களை அடுத்த வாரம் தொடக்கம் முடக்கும் அறிவிப்பை பேஸ்புக் வெளியிட்டுள்ளது.

தீவிரவாதக் குழுக்களின் பதிவுகளை அடையாளம் கண்டு முடக்கும் திறனை மேம்படுத்தி இருப்பதாகவும் பேஸ்புக் சமூகதளம் குறிப்பிட்டுள்ளது

அதுபோன்று புண்படுத்தும் சொற்களை பேஸ்புக்கில் தேடினால் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராக பணி புரியும் தொண்டு நிறுவனங்களின் பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் இரு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டதை அடுத்து அந்த சமூகதளத்தின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னதாக வெள்ளையின தேசியவாதத்தை கொண்ட விடயங்களை இனவாதமாக கருதாத பேஸ்முக் அவைகளுக்கு அனுமதி அளித்திருந்தது. இதில் பயனர்களின் வெள்ளையின நாடுகளை உருவாக்கும் அழைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அமெரிக்கர் பெருமை மற்றும் போஸ்க் பிரிவினைவாதம் போன்றவரை மக்களின் அடையாளத்தின் முக்கிய அம்சமாக ஏற்க முடியுமான கருத்து வெளிப்பாடாகவே வெள்ளை தேசியவாதத்தை அந்த நிறுவனம் கருதி வந்தது.

எனினும் சிவில் சமூகத்தினர் மற்றும் புத்திஜீவிகளுடன் மூன்று மாத ஆலோசனைக்குப் பின்னர் வெள்ளை தேசியவாதமானது வெள்ளை மேலாதிக்கவாதம் மற்றும் வேறுப்பை தூண்டும் குழுக்களில் இருந்து அர்த்தபூர்வமாக மாறுபடவில்லை என்பதை கண்டறிந்தோம் என்று பேஸ்புக் கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த முயற்சியை நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் வரவேற்றுள்ளார்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை