ஒரு மாத இடைவெளியில் குழந்தை பெற்ற பெண்

பங்களாதேஷில் பெண் ஒருவர் குறைமாத ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்து ஒரு மாதத்தில் இரட்டை குழந்தையை பெற்றுள்ளார்.

ஆரிபா சுல்தான் என்ற 20 வயது தாய் பெப்ரவரி மாதம் குழந்தை ஒன்றை பிரசவித்து 26 நாட்கள் கழித்து மீண்டும் பிரசவ வலி எடுத்து மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் தொடர்ந்து கர்ப்பமுற்றிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் சத்திரசிகிச்சை மூலம் இரட்டை குழந்தைளை எடுத்துள்ளனர். இரு குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எந்தப் பிரச்சினையும் இன்றி மருத்துவமனையில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தொடர்ந்து கர்ப்பமுற்றிருப்பதை அந்தப் பெண் தெரிந்திருக்கவில்லை என்று அவருக்கு சிகிச்சை அளித்த ஷெய்லா பொட்டர் என்ற மருத்துவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

எனினும் இரு கருக்கள் இருப்பது மக்கள் நினைப்பது போல் மிக அரிதான ஒன்று அல்ல என்று சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணோயியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Fri, 03/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை