விமானப்படையின் 68 ஆவது விழா ஹிங்குராங்கொடையில் ஆரம்பம்

சாகசங்கள், கண்காட்சிகளும் ஏற்பாடு

இலங்கை விமானப்படையின் 68 ஆவது விழா நாளை 2 ஆம் திகதி ஹிங்குராங்கொடை விமானப் படைத் தளத்தில் ஆரம்பமாக உள்ளதாக விமானப்படைத் தளபதி ஏயார் மாஷல் கபிலஜெயம்பதி தெரிவித்தார்.

ஹிங்குராக்கொடை விமானப்படைத் தளத்தில் ஆரம்பமாகவுள்ள இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளகிறார்.

இதைத் தொடர்ந்து அன்றைய தினம் விமானப்படையின் விசேட கண்காட்சி ஆரம்பமாகி,மார்ச் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இங்கு விமானப்படை ஆயுதங்கள், விமானங்கள், ஹெலிகெப்டர்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன், பரசூட் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட இருப்பதாக அவர் குறிப்பிட்டார். புதிய முறையிலான பரசூட் சாகசங்களும் இதன் போது காட்சிப்படுத்தப்படவுள்ளது.

இம்முறை விசேட அம்சமாக 8 ஆவது விமானப்படை பிரிவு மற்றும் 7 ஆவது ஹெலிகொப்டர் படைப்பிரிவு என்பவற்றுக்கு ஜனாதிபதி வர்ண விருதும் வழங்கப்பவுள்ள மை குறிப்பிடத்தக்கதாகும். இந்த கண்காட்சி யில் விமானப்படைக்கு ஆட்சேர்ப்பும் இடம் பெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் வருகைதந்து இலவசமாகப் பார்வையிட்டுச் செல்லக்கூடிய வகையில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைக்காலமாக விமானப்படை நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் பங்களித்து வருவதாக குறிப்பிட்ட அவர், காடழிப்பை குறைப்பதற்காக விதை குண்டு பொழிதல், செயற்கை மழை பெய்யவைத்தல் நல்லிணக்கத்திற்காக வடக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதல் என்பவற்றிலும் விமானப்படை ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், இவை குறித்தும் மக்களை அறிவூட்ட இருப்பதாக தெரிவித்தார்.

இதே ​வேளை 68 ஆவது விமானப்படை தினத்தையொட்டி இன்று(01) விமானப்படை சைக்கிளோட்டப்போட்டி ஆரம்பமாகிறது. (பா)

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை