மாத்தறையில் அமெரிக்க நிலையம் அங்குரார்ப்பணம்

மாத்தறை வர்த்தக சம்மேளன கட்டிடப் பகுதியில் அமெரிக்க நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எலன்னா பி டெப்லிட்ஸ், நிதியமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர். இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையத்தில் அதற்கான வளங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. இவ்வாறான நிலையங்கள் கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. (ஸ)

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை