44 பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு விழா

அம்பாறை திருக்கோவில் கல்வி வயலத்திற்குட்பட்ட 44 பாடசாலைகள் பங்கு கொண்ட வலயமட்ட விளையாட்டு விழாவில் 139 புள்ளிகளுடன் முதலாம் இடத்தினைப் பெற்று 2019ஆம் ஆண்டுக்கான திருக்கோவில் வலயமட்ட சம்பியனாக பொத்துவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியால மாணவர்கள் முடிசூடிக் கொண்டனர்.

திருக்கோவில் வலயமட்ட விளையாட்டு விழா வலயக் கல்விப் பணிப்பாளர் வை.ஜெயச்சந்திரன் தலைமையில் விநாயகபுரம் மகாவித்தியாலய மைதானத்தில் மிகவும் விமர்சியாக கடந்த வெள்ளிக்கிழமை மாலை(15) இடம்பெற்றிருந்தன.

இவ் விளையாட்டு விழாவில் அதிதிகள் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டதோடு தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்தைத் தொடர்ந்து வலய மற்றும் பாடசாலைகளின் கொடிகள் ஏற்றப்பட்டதுடன் ஒலும்பிக் சுடர் ஏற்றப்பட்டு மாணவர்களின் சத்தியப்பிரமானம் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான மைதானப் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. மைதானத்தில் அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களின் உடற்பயிற்றி கண்காட்சி இடம்பெற்றதோடு தேசிய ரீதியில் வெற்றி பெற்ற மாணவர்களின் கராத்தே கண்காட்சியும் இடம்பெற்று இருந்தன.

திருக்கோவில் வலயமட்ட விளையாட்டு விழாப் போட்டிகளில் ஆண்களுக்கான அணிவகுப்பு போட்டியில் முதலாம் இடத்தினை தாண்டியடி விக்ேனஸ்வரா மகாவித்தியாலயமும், இரண்டாம் இடத்தினை தம்பிலுவில் தேசிய கல்லூரியும், மூன்றாம் இடத்தினை திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயமும் பெற்றுக் கொண்டதுடன் பெண்களுக்கான அணிவகுப்பு போட்டியில் முதலாம் இடத்தினை தாண்டியடி விக்ேனஸ்வரா மகாவித்தியாலயமும்,இரண்டாம் இடத்தினை அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியும், தம்பிலுவில் தேசிய கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளும் பெற்றுக் கொண்டன.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையிலான பேண்ட்வாத்திய அணிவகுப்பு போட்டியில் முதலாம் இடத்தினை திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும், இரண்டாம் இடத்தினை பொத்துவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயமும், மூன்றாம் இடத்தினை அக்கரைப்பற்று இராமகிருஷ்ண மிஷன் கல்லூரியும் பெற்றுக் கொண்டன.

திருக்கோவில் வலயமட்ட ஆண்களுக்கான சாரணியர் அணிவகுப்பு போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும், விநாயகபுரம் சத்தி வித்தியாலயமும் தம்பிலுவில் தேசிய கல்லூரி மாணவர்களும் தட்டிச் சென்றதுடன் பெண்களுக்கான சாரணிய அணிவகுப்பு போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் தமிழ் மகாவித்தியாலயமும், விநாயகபுரம் சத்தி வித்தியாலயமும், கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயமும் பரிசில்களை தட்டிச் சென்றிருந்தன.

திருக்கோவில் கல்வி வலயத்தின் வலயமட்ட அனைத்து விளையாட்டுப் போட்டியிலும்; 139 புள்ளிகளைப் பெற்று பொத்துவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயம் முதலாம் இடத்தினைப் பெற்று 2019ஆம் ஆண்டுக்கான வலயமட்ட சம்பியன் கிண்ணத்தைப் பெற்று வெற்றிவாகை சூடிக் கொணடதுடன் 130புள்ளிகளைப் பெற்று தாண்டியடி விக்ேனஸ்வரா வித்தியலம் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் 124புள்ளிகளைப் பெற்று திருக்கோவில் மெதடிஸ்த மிஷன் மகாவித்தியாலயம் மூன்றாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.

(திருக்கோவில் தினகரன் நிருபர்)

 

Wed, 03/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை