24 சிக்சர் அடித்து இங்கிலாந்து உலக சாதனை

மேற்கிந்திய தீவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை நிலைநாட்டியது

இங்கிலாந்து- மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜோர்ஜில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து

அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ஓட்டங்கள் குவித்தது. மேற்கிந்திய தீவுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். தலைவர் மோர்கன் (103 ஓட்டங்கள், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் (150 ஓட்டங்கள், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ஓட்டங்கள்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ஓட்டங்கள் ) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவு அணி 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

பின்னர் 419 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவு அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை