இலங்கை விமானப் படை சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று

இலங்கை விமானப்படையின் 68வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களோடு இணைந்ததாக தொடர்ந்து 20 வருடங்களாக நடாத்தப்பட்டு வரும் விமானப் படை சைக்கிள் ஓட்டப் போட்டி இன்று 01, 02, 03ம் திகதிகளில் நடாத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை விமானப் படை இலங்கை சைக்கிள் ஓட்ட சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த சைக்கிள் ஓட்டப்போட்டிக்கான இணை அனுசரணையாளர்களாக அபான்ஸ் நிறுவனமும், டேவிட் பீரிஸ் நிறுவனமும் செயற்படுகின்றன. இந்தப் போட்டிகளுக்கான காப்புறுதி ஒத்துழைப்பை பீபல்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இலங்கை விமானப் படையின் இந்த சைக்கிள் ஓட்டப் போட்டியின் பிரதான நோக்கம் சைக்கிள் ஓட்டப் போட்டியினை இலங்கையினுள் விரிவு படுத்துவதும், சைக்கிள் ஓட்டப் போட்டியாளர்களிடையே போட்டித் தன்மையினை ஏற்படுத்துவதோடு இந்தப் போட்டிகள் தேசிய சைக்கிள் ஓட்டச் சம்மேளனத்தின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சர்வதேச தரத்திற்கு அமையவாக நடாத்தப்படுகின்றது.

விமானப் படையின் 68வது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்திற்கு இணையாக இடம்பெறும் சைக்கிள் ஓட்டப்போட்டியில் இலங்கையின் முன்னணி சைக்கிள் ஓட்டப் போட்டியாளர்கள் 150 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொள்ளவுள்ளதோடு சர்வதேச சைக்கிள் ஓட்டப் போட்டியாளர்களும் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டி

01ம் திகதி - கொழும்பிலிருந்து கண்டி வரையில் (114.3 கிலோ மீற்றர்)

02ம் திகதி - கண்டியிலிருந்து அநுராதபுரம் வரையில் (146.6 கிலோ மீற்றர்)

03ம் திகதி - அநுராதபுரத்திலிருந்து பொலனறுவை வரையில் (126.80 கிலோ மீற்றர்)

இந்த ஓட்டப் போட்டியின் மொத்த தூர அளவு 387.7 கிலோ மீற்றர்களாகும்.

அதே போன்று 03ம் திகதி பெண்களுக்கான சைக்கிள் ஓட்டப் போட்டியும் நடாத்தப்படவுள்ளது. இது தம்புள்ளையிலிருந்து பொலனறுவை வரையில் இடம்பெறவுள்ளதோடு இதன் தூரம் 64.8 கிலோ மீற்றர்களாகும்.

அத்துடன் ஆண்கள் மற்றும் பெண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கும், குழுக்களின் முகாமையாளர்களுக்கும் ஒரு நாளைக்கு 2000 ரூபாவுக்கும் அதிகமான தொகை கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதிக தொகையைக் கொண்ட கொடுப்பனவு விமானப் படையினால் ஆறாவது தடவையாகவும் வழங்கப்படுகின்றது.

இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப்படும் பணப் பரிசில்கள் விபரம்

1ம் இடம் - 300,000.00 ரூபா

2ம் இடம் - 150,000.00 ரூபா

3ம் இடம் - 100,000.00 ரூபா

4ம் இடம் - 50,000.00 ரூபா

5ம் இடம் - 30,000.00 ரூபா

6ம் இடம் - 20,000.00 ரூபா

7ம் இடம் - 15,000.00 ரூபா

8ம் இடம் - 12,500.00 ரூபா

9ம் இடம் - 10,000.00 ரூபா

10ம் இடம் - 10,000.00 ரூபா

11ம் இடம் - 5,000.00 ரூபா

12ம் இடம் - 5,000.00 ரூபா

13ம் இடம் - 5,000.00 ரூபா

14ம் இடம் - 5,000.00 ரூபா

15ம் இடம் - 5,000.00 ரூபா

16ம் இடத்திலிருந்து 25ம் இடம் வரையில் 3000 ரூபா வீதம் பணப் பரிசில் வழங்கப்படும்.

அனைத்து ஸ்பிரிண்ட் சம்பியன் - 50,000.00 ரூபாய்

1ம் கட்டத்தின் ஸ்பிரிண்ட் சம்பியன் - 10,000.00 ரூபா

2ம் கட்டத்தின் ஸ்பிரிண்ட் சம்பியன் - 10,000.00 ரூபா

3ம் கட்டத்தின் ஸ்பிரிண்ட் சம்பியன் - 10,000.00 ரூபா

கட்டங்களுக்கான பரிசில்கள்

முதலாம் இடம் - 25,000.00 ரூபா

இரண்டாம் இடம் - 15,000.00 ரூபா

மூன்றாம் இடம் - 10,000.00 ரூபா

அனைத்து மலை சம்பியன் - 15,000.00 ரூபா

அனைத்து அணி சம்பியன்

வெற்றி பெறும் அணி - 150,000.00 ரூபா

இரண்டாமிடம் - 75,000.00 ரூபா

அனைத்து இளம் போட்டியாளர் (23 வயதின் கீழ்) - 50,000.00 ரூபா

இலங்கை விமானப் படையினால் பெண்கள் போட்டியாளர்களுக்கு விளையாட்டிற்கான ஊக்கத்தை வழங்குவதற்காக எட்டாவது தடவையாகவும் நடாத்தப்படும் பெண்கள் சைக்கிள் ஓட்டப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு கீழ்வருமாறு பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளதோடு அன்றைய தினத்தில் தங்குமிட வசதிகளும் விமானப் படையினால் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும்.

அ. அனைத்து போட்டிகளிலும் வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் பணப் பரிசு

1ம் இடம் - 50,000.00 ரூபா

2ம் இடம் - 30,000.00 ரூபா

3ம் இடம் - 20,000.00 ரூபா

4ம் இடம் - 15,000.00 ரூபா

5ம் இடம் - 10,000.00 ரூபா

ஆ. அனைத்து ஸ்பிரிண்ட் சம்பியன் - 30,000.00 ரூபா

இ. அணி சம்பியன்

வெற்றி பெறும் அணி - 30,000.00

இரண்டாமிடம் 15,000.00

போட்டிகளில் வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 03ம் திகதி மாலை ஹிங்குரக்கொடை விமானப் படை முகாம் வளாகத்தில் இடம் பெறும் விமானப் படை நூற்றாண்டு விழா கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகளோடு இணைந்ததாக விமானப் படைத் தளபதி எயார் மாஷல் கபில ஜயம்பதியின் தலைமையில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

(புத்தளம் விஷேட நிருபர்)

Fri, 03/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை