2019 பட்ஜட்; இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

Rizwan Segu Mohideen
2019 பட்ஜட்; இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்-Budget 2019 2nd Reading Passed by 43 More Votes

2019 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று (12) பிற்பகல் இடம்பெற்ற இவ்வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 43 வாக்குகளும் வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இவ்வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தன.

இதற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

(பாராளுமன்றத்திலிருந்து மகேஸ்வரன் பிரசாத்)

Tue, 03/12/2019 - 18:41


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக