இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Rizwan Segu Mohideen
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு-Fuel Prices increased-Petrol OCT 92 by Rs 3-Petrol OCT by Rs 7-Auto Diesel by Rs 1-Super Diesel by Rs 8 Midnight Today-Feb 11 2018

இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில், எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 3 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 7 இனாலும் ஒட்டோ டீசல் ரூபா 1 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, இன்று நள்ளிரவு (13) முதல் அமுலாகும் வகையில், குறித்த விலை அதிகரிப்பு அமுலுக்கு வருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, மாதாந்த விலை மறுசீரமைப்புக்கு அமைவாக, கடந்த பெப்ரவரி 12 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் மறுசீரமைக்கப்பட்டன.

பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 6 இனாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரூபா 5 இனாலும் ஒட்டோ டீசல் ரூபா 4 இனாலும், சுப்பர் டீசல் ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டன.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) எரிபொருள் விலைகள்

  • பெற்றோல் Octane 92 - ரூபா 129 இலிருந்து ரூபா 132 ஆக ரூபா 3 இனாலும்
  • பெற்றோல் Octane 95 - ரூபா 152 இலிருந்து ரூபா 159 ஆக ரூபா 7 இனாலும்
  • ஒட்டோ டீசல் - ரூபா 103 இலிருந்து ரூபா 104 ஆக ரூபா 1 இனாலும்
  • சுப்பர் டீசல் - ரூபா 126 இலிருந்து ரூபா 134 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
Tue, 03/12/2019 - 20:04


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக