2018 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு

2018 O/L பரீட்சை முடிவுகள் வெளியீடு-2018 GCE OL Results Released

- 6 இலட்சத்து 56,984 பரீட்சார்த்திகள் விண்ணப்பம்; 518,184 தோற்றம்
- உயர் தரம் கற்க தகுதியானோர் 71.66%
- 9 பாடங்களிலும் A சித்தி - 9,413 பேர்
- முதல் 10 இடங்களில் 7 மாணவிகள்

2018 இடம்பெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

பரீட்சை முடிவுகள் www.doenets.lk இணையத்தளத்தில் அல்லது கீழே உள்ள கூட்டில் உங்களது சுட்டிலக்கத்தை வழங்குவதன் மூலம் இங்கே பார்வையிட முடியும்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில், கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி மாணவி, நிலக்னா வருஜவிதான முதலிடத்தை பெற்றுள்ளார்.

இரண்டாமிடத்தை மூன்று மாணவிகள் பிடித்துள்ளதோடு, முதல் 10 இடங்களை பிடித்தோரில் 7 மாணவிகளும் 3 மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற 10 மாணவ, மாணவியர்களின் விபரம்
1. நிலக்னா வருஷவிதான - கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி, கொழும்பு 05
2. சவித்தி ஹங்சதி - கொழும்பு விசாகா மகளிர் கல்லூரி, கொழும்பு 05
2. சஞ்சானி திலேக்கா குமாரி - கம்பஹா ரத்னாவலி மகளிர் கல்லூரி
2. மிந்தி ரெபேக்கா - மாத்தறை சுஜாதா வித்தியாலயம்
5. கயாத்திரி ஹர்ஷிலா லிஹிணிகடுஆராச்சி - கேகாலை புனித ஜோசப் கல்லூரி
6. சந்தலி ரத்நாயக்க - கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு 08
6. யசங்க சமரகோன் - கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு 07
6. கவிரு மெத்னுக - கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு 07
6. ஷஷ்மித லியனகே - காலி மஹிந்த கல்லூரி
6. ஹிமாஷி எரங்திகா - களுத்துறை தக்‌ஷிலா மகா வித்தியாலயம், ஹொரணை

வெளியிடப்பட்ட பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 9,413 மாணவ, மாணவியர் 9 பாடங்களிலும் A சித்திபெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

கணித பாடத்தில் சித்தியடைந்தோர் 64.11% எனவும், 71.66% ஆனோர் க.பொ.த. உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2018 டிசம்பர் 03 ஆம் திகதி முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரை க.பொ.த. (சா/த) பரீட்சைகள் இடம்பெற்றன.

நாடு முழுவதிலுமுள்ள 4,661 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்ற இப்பரீட்சையில்,  6 இலட்சத்து 56,984 பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் விண்ணப்பிந்திருந்ததோடு, அதில் 518,184 பேர் பரீட்சைக்கு தோற்றியதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

இப்பரீட்சைகளின்போது தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் பாவனை உள்ளிட்ட பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்பில் 969 பரீட்சாத்திகளின் பரீட்சை முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது கையடக்க தொலைபேசியின் மூலம் பரீட்சைப் பெறுபேறுகளை SMS வழியாக அறிந்துகொள்ள EXAM இடைவெளி OL இடைவெளி சுட்டெண் என டைப் செய்து 1919 க்கு அனுப்புவதன் மூலம் தகவல் திணைக்களத்தின் மூலம் பெறுபேறுகளை அறிந்துகொள்ள முடியும்.
 
அல்லது அனைத்துவிதமான கையடக்க தொலைபேசி வலையமைப்பினூடாகவும் பரீட்சை பெறுபேறுகளை அறிய EXAMS இடைவெளி சுட்டெண்ணை டைப் செய்து 
7777 Dialog
8884 Mobitel
7545 Airtel
3926 Etisalat
8888 Hutch

மேற்குறிப்பிட்ட வலையமைப்புகளின்  இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளை பெறலாம்.

Thu, 03/28/2019 - 22:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை