தலைமன்னாரில் 1547.68 கிலோகிராம் பீடி இலைகளுடன் மூவர் கைது

தலைமன்னாரில் 1547.68கிலோகிராம் பீடி இலைகளுடன் மூவரைக் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் கடற்படையினர் இன்று (22) காலை நடத்திய சோதனையின்போதே, இச்சந்தேக நபர்களைக் கைதுசெய்துள்ளதுடன், 41உரப்பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில காணப்பட்ட  பீடி இலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த பீடி இலைகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு டிங்கிப் படகு மூலம் கொண்டு வரப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

தலைமன்னார், ஊருமலைப் பகுதியைச் சேர்ந்த 28, 30, 35வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பீடி இலைகளுடன் சந்தேக நபர்களை யாழ். சுங்கத் திணைக்களத்தினரிடம் விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

மேலும், தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் கடந்த சில தினங்களாக  கடற்படையினர் நடத்திய சோதனையின்போது, 2787.3 கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Fri, 03/22/2019 - 13:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை