பொதுத்துறையை பலப்படுத்தி அபிவிருத்தி இலக்கை அடைய விசேட செயலமர்வு

இலங்கை அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பொதுத்துறையின் வினைத்திறனான பங்களிப்பை பலப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக “பொதுத்துறை நிபுணத்துவத்திற்கான தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்தாக்கம்” என்ற தலைப்பில் செயலமர்வொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுத்துறையின் முழுமையான ஆற்றலை கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும்.  

முதலாவது சமூகப் புத்தாக்க ஆய்வுகூடமான சிட்ரா, பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றுடன் இணைந்து இந்த செயலமர்வை முன்னெடுத்தது. 

விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆய்வு அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சி (UNDP) என்பவற்றிற்கு இடையிலான இணைத் திட்டமான, சிட்ரா, வினைத்திறன் மிக்க மற்றும் முழுமையானதாக இருப்பதனை உறுதி செய்வதற்கு முன்மாதிரி மற்றும் பரீட்சார்த்த அபிவிருத்தி தீர்வுகளுக்கு தொலைநோக்கு பார்வை கொண்ட மற்றும் புத்தாக்கமான கருவிகளைப் பயன்படுத்துகின்றது.   மேலும் சிட்ராவானது நாட்டின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் இணைந்ததாக பணியாற்றுவதோடு, அபிவிருத்தி தீர்வுகளை உருவாக்குவதற்கு சிறந்த பிரஜைகள் பங்குபற்றுனர்களின் மனநிலைகளை மாற்றுவதற்கும், இலங்கை பொதுத் துறையில் புத்தாக்கத்தின் விற்பன்னர்களாகுவதற்கும் இந்த நிகழ்ச்சி இலக்கு வைத்திருந்தது.   அமைச்சர்கள் ரஞ்சித் மத்தும பண்டார, சாகல ரத்னாயக்க, பிரதியமைச்சர் நளீன் பண்டார, சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளான மகிந்த தேசப்பிரிய, ஒஸ்டின் பெர்னாண்டோ மற்றும் அமைச்சின் செயலாளர்கள் உள்ளடங்கலான பொதுத்துறையின் முக்கிய அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர். 

ஒரு வார கால வதிவிடப் பயிற்சியைத் தொடர்ந்து, இரண்டாவது படிநிலையில், தமது தற்போதைய பணியில் தமது பெறுமதியை மேம்படுத்துவதற்கு தாம் கற்ற திறன்கள் மற்றும் கருவிகளை அதிகாரிகள் பயன்படுத்தினர். பங்குபற்றுனர்கள் அனைவரும் ஒரு செயற்றிட்டத்தில் பணியாற்றினர். தமது திணைக்களத்தில் அல்லது அமைச்சில் தற்போதுள்ள சவாலுக்கு புத்தாக்கமான தீர்வு ஒன்றை கண்டறிவதற்கு அது உதவியது.  

மூன்றாவதும், இறுதியுமான படிநிலையில், 2019ஆம் ஆண்டு ஜனவரி 30மற்றும் 31ஆம் திகதிகளில் 2நாட்கள் மீட்டல் அமர்வில் இந்த அதிகாரிகள் கலந்து கொண்டு, கடந்த மூன்று மாதங்களுக்கான தமது அனுபவங்களையும், பின்னூட்டங்களை பகிர்ந்து கொண்டனர். பொதுத் துறையில் நீடித்த தாக்கத்தை உருவாக்குவதற்கு துடிப்பும், உறுதியும் கொண்ட இந்த அதிகாரிகளை அங்கீகரிக்கும் வகையில் நிகழ்வின் இறுதியில் விருதுகளும் வழங்கப்பட்டன.  

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பொதுநிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், ரஞ்சித் மத்தும பண்டார, “எமது பொதுத் துறை அதிகாரிகளுக்காக தொலைநோக்குப் பார்வை மற்றும் புத்தாக்கம் தொடர்பான நிகழ்ச்சியை வடிவமைப்பதில் சிட்ரா சமூகப் புத்தாக்க ஆய்வுகூடத்துடன் பணியாற்றியதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எமது பணியில் புத்தாக்கத்தையும், புதிய சிந்தனையையும் உள்ளடக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, எமது பொதுத் துறையை நிலைமாற்றுவதற்கு மற்றும் இலங்கை மக்களுக்கு வினைத்திறன் மிக்க வகையில் பணியாற்றுவதற்கு இவ்வாறான முயற்சிகளைத் தொடர்வதற்கும் நாம் எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.  

UNDP இன் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி யோர்ன் சொரென்சன் குறிப்பிடுகையில், “தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த முழுமையான கற்றல் அனுபவத்தை வடிவமைப்பதற்கும் மற்றும் வசதியளிப்பதற்கும் பொது நிர்வாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து பணியாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்.

Fri, 03/22/2019 - 13:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை