சவூதி அரேபிய இளவரசி ரீமா அமெரிக்க தூதுவராக நியமனம்

சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தூதுவராக இளவரசி ரீமா பின்த் பன்தர் அல் சவூத் அமெரிக்காவுக்கான சவூதி தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  

கடந்த சனிக்கிழமை வெளியான அரசாணை மூலம் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இளவரசி ரீமா தனது குழந்தை பருவத்தை வொஷிங்டனில் கழித்தவராவார்.  

இந்த பதவியில் தற்போது இருந்து வரும் முடிக்குரிய இளவரசர் முஹமது பின் சல்மானின் தம்பியான இளவரசர் காலித் பின் சல்மான் நாட்டின் பிரதி பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ரீமாவின் தந்தை பண்டார் அல் சுல்தான் சவுத், அமெரிக்க தூதர் பொறுப்பில் 1983ஆம் ஆண்டிலிருந்து 2005 வரை இருந்தார். அவரின் பதவி காரணமாக ரீமா தனது குழந்தை பருவத்தை அமெரிக்காவில் கழிக்க நேர்ந்தது.  

2005ஆம் ஆண்டு ரியாத் திரும்பிய பின்னர் அவர் பொது மற்றும் தனியார் துறையில் பணியாற்றி வந்தார். 

ஆண் பெண் சமத்துவம் குறித்து அதிகம் விமர்சிக்கப்படும் சவூதி அரேபியாவில் இளவரசி ரீமா பெண்களுக்கான உரிமைகள் குறித்து பேசி வருகிறார்.     

Mon, 02/25/2019 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை