உதயங்கவின் வேண்டுகோளை இண்டர்போல் நிராகரிப்பு

தன் மீது விடுக்கப்பட்டுள்ள சிவப்பு அறிக்கையை செல்லுபடியற்றதாக்குமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விடுத்த வேண்டுகோளை இன்டர்போல் நிராகரித்துள்ளதாக தெரிய வருகிறது. 

தனக்கு எதிராக இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் அரசியல் ரீதியானவை என்பதால் தன் மீது விடுக்கப்பட்ட சிவப்பு அறிக்கையை மீளப்பெறுமாறு ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கடந்த வருடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

2006 இல் இடம்பெற்ற மிக் விமானக் கொள்வனவில் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தமைக்காக இலங்கை அரசாங்கத்தால்,  இவர் தேடப்படுபவராக உள்ளார். 

அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு ஐக்கிய அரபுக் குடியரசின் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெறுகிறது. இதன் அடுத்த விசாரணை எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.  

Mon, 02/25/2019 - 10:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை