கடந்த நான்கு ஆண்டுகளில் உலக வெப்பநிலை உச்சம்

உலக வெப்பநிலை பதிவுசெய்யப்பட்ட ஆரம்பத்தில் இருந்து கடந்த 4 ஆண்டுகளில் உலகம் மிக அதிகமாக வெப்பமடைந்திருப்பதாக ஐ.நா நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

கடலிலும் நிலத்திலும் வெப்பம் கணிசமாக உயர்ந்திருப்பதாக உலக வானிலை அமைப்பு குறிப்பிட்டது. உலக வெப்பநிலை 1850ஆம் ஆண்டில் இருந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அப்போதிருந்து, மிக வெப்பமான பத்தாண்டு காலத்தின் நடுவில் தற்போது உலகம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அடுத்தடுத்த 5 ஆண்டு காலகட்டங்களில், வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டில் சராசரி உலக வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸுக்கு அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Fri, 02/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை