நிதி, ஊடகத் துறை அமைச்சுக்களில் மாற்றம்: புதிய வர்த்தமானி வெளியீடு

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தையடுத்து புதிய அமைச்சுக்களுக்கான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களை உள்ளடக்கி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  

இம் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மேற்படி இவ்விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதற்கிணங்க நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ளடக்கப் பட்டிருந்த ஊடகத்துறையோடு இணைந்த விடயங்கள் மற்றும் திணைக்களங்கள், நிறுவனங்கள் அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சரவையின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன.  

இதற்கிணங்க தகவல் திணைக்களம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சிச் சேவை, அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் ஆகியன அமைச்சரவை அந்தஸ்த்தற்ற ஊடகத்துறை அமைச்சின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, அமைச்சரவை அந்தஸ்த்தற்ற ஊடகத்துறை அமைச்சராக அண்மையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ருவன் விஜேவர்தன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

 இந்நிலையில் அமைச்சரவை அந்தஸ்தற்ற விசேட பிரதேச அபிவிருத்தி அமைச்சின் கீழ் கிராமிய புத்தெழிச்சி நிதியம், மக்கள் ஊக்குவிப்பு நிதியம் ஆகிய நிறுவனங்கள் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வழங்கப்பட்டுள்ளன. (ஸ)      

Thu, 02/28/2019 - 11:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை