தேசிய அரசு யோசனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

டளஸ் அலகப்பெரும தெரிவிப்பு

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டத்திற்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்க இருப்பதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற குழு கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணான இந்த யோசனையை நிகழ்ச்சிநிரலில் உள்ளடக்க வேண்டாம் என சபாநாயகரிடம் வேண்டுகோள் முன்வைக்கின்றோம். இந்த யோசனைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம். நாட்டின் அரசியலமைப்பில், 46 (5) ஆம் சரத்தை மீறுவதாகத் தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 30க்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை