கொரிய நாட்டு உதவியுடன் கலமெடிய மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள முதலாவது ஸ்மார்ட் மீன்பிடித் துறைமுகமாக கலமெடிய மீன்பிடித் துறைமுகம் கட்டியெழுப்பப்படுமென மீன்பிடி நீரியல் வளத்துறை பிரதி அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.  

கலமெடிய மீன்பிடித் துறைமுகத்தினை அதி நவீன வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகமாக கட்டியெழுப்பவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிவதற்காக கொரிய நாட்டு பிரதிநிதிகளுடன் அங்கு சென்று பார்வையிட்டபின் கருத்து தெரிவிக்கையிலே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  ​ைபிரதி அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றும் போது, உலகின் அதிகமான முன்னேற்றகரமான அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இவ்வாறான ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகங்கள் காணப்படுகின்றன. எமது நாட்டில் முதல் தடவையாக கலமெடியவில் நிர்மாணிக்கப்படவுள்ள ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகத்திற்கு உதவ கொரிய அரசாங்கம் முன்வந்துள்ளது. இதனால் இந்த மீன்பிடி துறைமுகம் அதி நவீன வசதிகளுடன் கட்டியெழுப்பப்படும் எனவும் பிரதி   அ​ைமச்சர் தெரிவித்தார்.  

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கொரிய நாட்டின் துாதுவர் குழு வின் தலைவர் ஹயூனிக்  யூன் இங்கு உரையாற்றுகையில்,   ஸ்மார்ட் மீன்பிடி துறைமுக திட்டத்தின் கீழ் கலமெடிய மீன்பிடி  துறைமுகத்தினுள்  அதி நவீன சூரிய மின் உற்பத்தி திட்டமொன்றினை அமைக்கவுள்ளதோடு  சுத்தமான  நீரினை பெற்று மீனவர்களது  குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினை  பெற்றுக் கொடுக்கவும் உத்தேசித்துள்ளோம். துறைமுகத்தினுள்  ஆரம்பிக்கப்படும்  சூரிய மின் உற்பத்தி மற்றும் சுத்தமான குடிநீர் திட்டங்களினூடாக  துறைமுகத்தினை அண்மிய பிரதேசங்களுக்கும் மின்சாரம் மற்றும் சுத்தமான  குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் .

ஹம்பாந்தோட்டை குறப் நிருபர்  

Wed, 02/20/2019 - 12:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை