அமைச்சர்கள் கொக்கேயின் பாவிப்பா?; பொலிஸில் முறைப்பாடு

அமைச்சரவையில் கொக்கேயின் போதைவஸ்து உபயோகிக்கும் அமைச்சர்கள் இருப்பதாக வெளிவரும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உண்மையைக் கண்டறியும் அமைப்பு, பொலிஸ் தலைமையகத்தில் நேற்று முறைப்பாடொன்றை செய்துள்ளது.  

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க அமைச்சரவையில் கொக்கேயின் போதைப் பொருள் உபயோகிப்போர் உள்ளதாக பகிரங்கமாக தெரிவித்து வந்துள்ளார். அதனை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன.

இதற்கிணங்க அமைச்சரின் கூற்றை அடிப்படையாக வைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேற்படி அமைப்பின் இணைப்புச் செயலாளர் சட்டத்தரணி பிரேமநாத் தொலவத்த பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்தகைய விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளது என்றும் அவர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.  

போதைப் பொருளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரவை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிக மோசமானது என்றும், அதனால் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியமென்றும் அவர் தம் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

 

Tue, 02/19/2019 - 15:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை