இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வடக்கில் மீளக்குடியேற வேண்டும்

இராஜாங்க அமைச்சர் விஜயகலா அழைப்பு 
 
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்   
 
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும் எனப் பகிரங்க அழைப்பு விடுப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புத்தளத்தில் தெரிவித்தார்.   
 
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03) நூர்தீன் மசூர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது. 
பாடசாலையின் அதிபர் எஸ்.எம்.ஹுஸைமத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மேற்கண்டவாறு ௯றினார்.   
 
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் மேலும் ௯றியதாவது,இன்று வடக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காணிகள் மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதமும் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. நாளை 6ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய மக்களின் சில தொகுதி காணிகளை கையளிக்கவுள்ளார். அதுமாத்திரமின்றி, வடமாகாணத்தில் வீட்டுப் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடந்த அரசாங்கம் செய்யாத பணிகளை நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நான்கு வருடங்களில் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்.   
 
Wed, 02/06/2019 - 10:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை