ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நேற்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூட்டத்தொடரை ஆரம்பித்துவைத்தார்.

ஆரம்ப நாள் நிகழ்வில் இலங்கை விவகாரம் தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை.  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிஷேல் பச்​லெட் தனது ஆரம்ப உரையில், மனித உரிமை விவகாரத்தில் தமது பொறுப்புக்களை நாடுகள் நிறைவேற்றுவதற்கு தமது அலுவலகம் ஒத்துழைப்புக்களை வழங்கும் என்று கூறினார்.  

மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளுக்கு தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இது அவர்களுக்கு அரசியல் ரீதியாக நன்மையை ஏற்படுத்தும் என்றும் கூறினார். மனித உரிமைகளைக் கண்காணிப்பது மற்றும் அவற்றை ஆராய்வது தொடர்பில் தொழில்நுட்ப உதவிகள் மற்றும் வழிகாட்டல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.  

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ளது. மார்ச் 20ஆம் திகதி இலங்கை குறித்து விவாதம் நடைபெறுகிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பிக்கவிருப்பதுடன், அதனைத் தொடர்ந்து விவாதம் நடத்தப்படும்.  

இதேவேளை, நாட்டினதும் அரசாங்கத்தினதும் தலைவர் என்ற வகையில் நான் பல விடயங்களை படித்திருக்கிறேன். ஆனால் உங்களுடன் இன்று பகிர்ந்துகொள்ள வேண்டிய இரண்டு விடயங்கள் உள்ளன.

அதில் ஒன்று மிகவும் சாதாரணமானது. அதாவது மனிதாபிமான அக்கறைக்கு எனது நாட்டின் தேசிய அக்கறைக்கும் இடையில் பாரதூரமான இடைவெளி மிகவும் அரிதாகவே இருந்தது.

சிலியின் நீண்ட கரையோரம் காரணமாக இவ்வாறு நடைபெறுகிறதா? இல்லை. இது பலமான வெளிச்சக்திகளின் வெளிப்பாடாக. இல்லை இது உண்மையிலேயே மேலும் அரிதானதா மற்றும் அனைத்து பிராந்தியங்களுக்கும் பொதுவானதா?

ஒரு கொள்கையானது குறுகிய அக்கறையுடன் சிறிது காலத்துக்கு மட்டுமே செல்லுபடியாகுமென்றால் அது எதிர்கால மனிதாபிமானத்துக்கு வலியைத் தரும் என்றால் அந்த கொள்கை ஆக்க வளத்துக்கு எதிரானதாகும்.

இன்று மனித உரிமைகள் என்பதை நாம் சில நேரம் உலகளாவியது என்று நிராகரித்து விடுகிறோம். ஆனால் அது இறைமையுள்ள அரசாங்கத்தின் தேசாபிமான அக்கறைக்கு எதிரானது. ஆனால் ஒரு தேசத்தின் அக்கறைசார் அதன் மக்களின் நலன்களை பாதிக்கும் கொள்கைகள் எவ்வாறு மேம்படுத்தப்படலாம்

எது காலநிலை மாற்றத்தை பொறுத்தவரை உண்மையாகும். சூழலைவிட பொருளாதார அக்கறைகள் அதிக முக்கியத்துவமானவை என்று நீங்கள் நினைத்தால் மூச்சை அடக்கிக்கொண்டு உங்கள் பணத்தை எண்ணுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

அது யுத்தத்தை பொறுத்தவரை உண்மையானது. இன்றைய மோதல்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அவற்றினால் ஏற்பட்ட பாரிய பொருளாதார மற்றும் மனிதாபிமான பாதிப்பானது மோசமான மற்றும் நீண்டகால தீங்கை ஏற்படுத்தும்.

பாகுபாட்டை பொறுத்தவரை உண்மையாகும். அது அனைத்து சமூகத்தையும் தடுத்து வைக்கும். அத்துடன் சமம் இல்லாததை பொறுத்தவரையிலும் கூட அது உண்மையாகும். மனித உரிமைகளை பாதுகாக்க மற்றும் ஊக்குவிக்க நாம் மேற்கொள்ளும் போராட்டத்தை அது உணர்த்தும்.

இந்த சவால்களை எதிர்நோக்க முடியும். நான் இன்று காலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் இரண்டாவது விடயம் இது. ஒரு தேசத்தின் தலைவர், ஒரு அரசாங்க அமைச்சரை அரசு சாரா தொண்டர் அமைப்பின் உறுப்பினர் மற்றும் ஒரு அகதி என்ற ரீதியில் நான் பல மனித உரிமை மீறல் செயற்பாடுகள் விவாதிக்கப்படுவதை நான் கண்டிருக்கிறேன். அத்துடன் அவை செயற்படுவதையும் நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மனித உரிமைகள் மையப்படுத்தப்பட்ட கொள்கைகள் செயற்படக்கூடியவை. அவைமக்களுக்கு சிறப்பான வெளிப்பாடுகளை வழங்குகின்றன. சமூக மற்றும் பெருளாதார வலயத்துக்கு அப்பாலும் எல்லைகளுக்கு அப்பாலும் அவை மனக்குறைகள், மோதல்கள், சமத்துவமின்மை மற்றும் வேதனைகள் மற்றும் அனைத்து வகை பாகுபாடுகளையும் தடுக்கின்றன.

சமூக நீதிகளை கட்டியெழுப்பும் கொள்கைகளும் பலமான பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய உதவுகின்றன.

அவை அதிக அரசியல் முறைமைகள், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏனைய அடிப்படை சேவைகள் தொடர்பான சிறந்த வரைச் சட்டங்களையும் உருவாக்குகின்றன.

அவை நம்பிக்கை மற்றும் சமூக ஒன்றுமையை கட்டியெழுப்புகின்றன. நம்பிக்கையை பலப்படுத்துகின்றன. எதிர்பார்ப்பினை ஏற்படுத்துகின்றன.

Tue, 02/26/2019 - 08:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை