அமெரிக்க அரச முடக்கத்தை தவிர்ப்பதற்கு புதிய உடன்பாடு

அமெரிக்க அரசாங்கத்திற்கு எல்லைச்சுவர் தொடர்பாக நிதியுதவி அளிப்பது மற்றும் மற்றொரு நாடு தழுவிய அரசுப்பணிகள் முடக்கத்தை தடுக்க ஜனநாயக கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவில் கேபிடல் ஹில்லில் நடந்த ஒரு சந்திப்பில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசு வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் காலாவதியாகின்ற, வரும் வெள்ளிக்கிழமைக்குள் சட்டத்தை நிறைவேற்றவேண்டும் என்ற இக்கட்டான நிலை இருந்த வேளையில் தற்போது இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டரான ரிச்சர்ட் ஷெல்பி, எல்லைச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிப்பது மற்றும் அரசுப்பணியில் முடக்கமாவதை தடுப்பது ஆகியவை தொடர்பாக இருந்த பல பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், இந்த உடன்படிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொள்வாரா என்பது தெளிவாக தெரியவில்லை. தற்போது டெக்சாஸில் ஒர் அரசியல் பேரணியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் முன்னர் கூறி இருந்தார்.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை