பூச்சிகள் வேகமாக அழிவு: பேரழிவு குறித்து எச்சரிக்கை

பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் ஏனைய காரணங்களால் பூச்சிகளின் எண்ணிக்கை விரைவாக வீழ்ச்சி கண்டுவருவது பூமியில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.

அடுத்த ஒருசில தசாப்தங்களில் 40 வீதத்திற்கும் அதிகமான பூச்சிகள் அழிந்து விடக்கூடும் என்று பயர்லொஜிக்கல் கன்சர்வேசன் சஞ்சிகையில் வெளியாகி இருக்கும் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பூச்சி உயிரினத் தொகுதி ஆண்டுக்கு 2.5 வீதம் வீழ்ச்சிகண்டு வரும் நிலையில் ஒரு நூற்றாண்டுக்குள் பரவலான அழிவு ஒன்றுக்கு அறிகுறியை காட்டுகிறது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. தேனீக்கள், எறும்புகள் மற்றும் வண்டுகள் ஆகிய பூச்சி இனங்கள் பாலுௗட்டிகள், பறவைகள் அல்லது ஊர்வனவை விடவும் எட்டு மடங்கு வேகமாக மறைந்து வருகின்றன.

எனினும் கொசு, கரப்பான் பூச்சி போன்ற பூச்சி இனங்கள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தீவிர விவசாயம் பூச்சிகள் அழிவதற்கு முதன்மை காரணம் என்று கூறும் இந்த ஆய்வு, பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் என்கிறது.

நிலத்தில் வாழ்கின்ற பெரும்பான்மைய உயிரினமாக உள்ள பூச்சிகள் மனிதர்கள் உட்பட ஏனைய உயிரினங்களுக்கு முக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது.

Wed, 02/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை