வெனிசுவேலாவுக்கான அமெரிக்க மனிதாபிமான உதவிகள் விரைவு

வெனிசுவெலாவுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்து வந்த அமெரிக்க விமானம் ஒன்று கொலம்பிய எல்லை நகரான குகுடாவில் தரையிறங்கியுள்ளது.  

தன்னைத் தான் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட அமெரிக்காவின் அங்கீகாரம் பெற்ற வெனிசுவேல எதிர்க்கட்சி தலைவர் ஜுவான் குவைடோவின் கோரிக்கைக்கு அமையவே அமெரிக்கா இந்த மனிதாபிமான உதவிகளை அனுப்பியுள்ளது.  

எனினும் இது வெனிசுவேலாவை ஆக்கிரமிப்பதற்கான சதி முயற்சி என்று அந்நாட்டு ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ சாடியுள்ளார். எனினும் இந்த உதவிப் பொருட்களை வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி எல்லை கடந்து எடுத்து வருவதற்கு சுமார் 600,000 வெனிசுவேல தன்னார்வலர்கள் முன்வந்திருப்பதாக குவைடோ குறிப்பிட்டுள்ளார்.  

எனினும் இந்த உதவிகள் வெனிசுவேலாவுக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுவது குறித்து தெளிவு இல்லாமல் உள்ளது.  

வெனிசுவேலா மற்றும் கொலம்பியாவுக்கு இடையிலான வீதிப்பாலம் ஒன்று ஊடே கப்பல் கொள்கலன்கள் வருவது வெனிசுவேலா பக்கமாக முடக்கப்பட்டுள்ளது.  

வெனிசுவேலாவில் இடம்பெற்றிருக்கும் மனிதாபிமான நெருக்கடியை அடுத்து குவைடோவின் கோரிக்கைக்கு அமைய இந்த உதவி அனுப்பப்படுவதாக அமெரிக்காவின் உதவி அமைப்பு குறிப்பிட்டுள்ளது.      

Mon, 02/18/2019 - 12:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை