நைஜீரிய கிராமங்களில் 66 சடலங்கள் மீட்பு

நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் 22 குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 66 பேரின் இறந்த உடல்கள் கண்டுபிடித்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

“குற்றப்பின்னணி உடையவர்களால்” கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு அதிகாரிகள், கொல்லப்பட்டவர்கள் குறித்த விபரங்களையோ, கொலைகளுக்கான நோக்கம் என்ன என்பதையோ இதுவரை உறுதிசெய்யவில்லை. 

மத ரீதியான மோதல்களால் இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவின் கதுனா மாகாணத்தில் அமைந்துள்ள குஜுரு பகுதியில் இருக்கும் எட்டு வெவ்வேறு கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.     

Mon, 02/18/2019 - 12:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை