பின்லாந்தின் பனிச்சறுக்கு வீரர் காலமானார்

பின்லாந்தின் மிகச்சிறந்த பனிச்சறுக்கு வீரரான Matti Nykanen, திங்கட்கிழமை) காலமானதாக அவரது மனைவி அறிவித்துள்ளார்.

மிகச்சிறந்த பனிச்சறுக்கு வீரரான இவர், ஆகாயத்தில் பறந்து, இலக்கை அடைவதில் வல்லவராக திகழ்ந்தார். நான்கு முறை ஒலிம்பிக் தங்கப்பதக்கங்களை வெற்றி கொண்ட இவர், சர்வதேச சம்பியன்ஸ் பதக்கங்கள் ஐந்தினையும் தனதாக்கியுள்ளார்.

பனிச்சறுக்கு விளையாட்டிற்கு அப்பால், தன்னை ஒரு பாடகராகவும் இவர் நிலைநிறுத்தியிருந்தார்.

இவரது வாழ்வு பல ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. திருமணங்கள், மற்றும் தனிப்பட்ட வாழ்வின் சர்ச்சைகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டிருந்தன.

Wed, 02/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை