வவுனியா இலங்கை திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டி அண்மையில் கல்லூரியின் அதிபர் இ.நவரட்ணம் தலைமையில் நடைபெற்றது. 

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்துகொண்டிருந்தார். 

விருந்தினர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து தேசியக்கொடியை முன்னாள் கோட்டக்கல்வி அதிகாரி எம்.பி.நடராஜன் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து பாடசாலை மற்றும் இல்லக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. 

ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் முத்து ராதாகிருஸ்ணன் சம்பிரதாய பூர்வமாக விளையாட்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். 

அதனைத்தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை அதிதிகள் பார்வையிட்டனர் 

விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. 

நிகழ்வில் விருந்தினர்களாக வவு னியா நகரபிதா இ.கௌதமன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் கே.யூட்பரதமாறன், குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவசிறி கந்தசாமி குருக்கள், குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தின் பிரதம போதகர் பி.தயாளன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.  

(கோவில்குளம் குறூப் நிருபர்)

Thu, 02/07/2019 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை