வெலிகம அறபாவில் இல்ல விளையாட்டுப் போட்டி

வெலிகம அறபா தேசிய பாடசாலையின் இவ் வருடத்துக்கான இல்ல விளையாட்டுப் போட்டிகள் பாடசாலை பதியுத்தீன் மஹ்மூத் விளையாட்டுத் திடலில் மிக விமர்சையாக நடைபெற்றது. 'லோடஸ்', 'ஜெஸ்மின்', றோஸ்' ஆகிய மூன்று இல்லங்களாக பாடசாலை மாணவர்கள் பிரிக்கப்பட்டு போட்டியிட்டன.  

இதில் 'லோடஸ்' இல்லம் 233.5புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்று சம்பியன் வெற்றிக் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது. 'ஜெஸ்மின்' இல்லம் 209புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், 'றோஸ்' இல்லம் 194.5புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டது.  

இறுதி நாள் பரிசளிப்பு வைபவம் கல்லூரியின் புதிய அதிபர் எம்.டீ.எம். முதஹ்ஹர் தலைமையில் இடம்பெற்றது. இதில் தென் மாகாண சபை உறுப்பினர் கயான் சஞ்சீவ பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிபெற்ற லோட்டஸ் இல்லத்துக்கு சம்பியன் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.  

விசேட அதிதிகளாக வெலிகம பிரதேச சபைத் தலைவர் புஷ்பகுமார பெட்டகே, வெலிகம நகர சபை உப தலைவர் எம்.ஜே.எம். மின்ஹாஜ், மாத்தறை வலய திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எம்.டீ.எம். ஆகில் உட்பட அரசியல் பிரமுகர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், பெற்றோர்கள் என பெருந் திரளானோர் கலந்து கொண்டனர்.  

இம் முறை அறபாவின் வரலாற்றிலே முதற் தடவையாக பெண்களுக்கான தனியான விளையாட்டுப் போட்டி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  

(வெலிக தினகரன் நிருபர்)

 

Thu, 02/07/2019 - 11:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை