இணைந்து பணியாற்ற அண்டை நாடுகளுக்கு ஈரான் அழைப்பு

ஈரான் அதன் அண்டை நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். 

மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நீண்ட காலமாக அதிகாரப் போட்டி நிலவுகிறது. சிரியா, யெமன் நாடுகளில் நடக்கும் போர்களில் இரு நாடுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

இந்த நிலையில் தனது அண்டை நாடுகளுடன் பணியாற்றத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. 

இது குறித்து ஹார்மோசான் மாகாணத்தில் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறும்போது, “மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்படுத்துவதற்கு ஈரான் அதன் அண்டை நாடுகளோடு பணியாற்றத் தயாராக உள்ளது. 

நாங்கள் இந்த பிராந்தியத்தில் சகோதரத்துவமான உறவையே விரும்புகிறோம். அமெரிக்காவும், இஸ்ரேலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நினைக்க வேண்டாம். அது தவறு. முஸ்லிமாகிய நாம்தான் இந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்” என்றார்.     

Tue, 02/19/2019 - 11:58


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை