இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல்; அர்ஜுன, நிஷாந்த தோல்வி

Rizwan Segu Mohideen
இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தல்; அர்ஜுன, நிஷாந்த தோல்வி-SLC Office Bearer Election-2019-Shammi Silva Elected as President of Sri Lanka Cricket-Arjuna Ranatunga-Nishantha Ranatunga Defeated

- தலைவர் ஷம்மி சில்வா, உப தலைவர்கள் ரவீன், மதிவாணன்
- செயலாளர் மொஹான் டி சில்வா

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் புதிய தலைவராக ஷம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு தொடர்பான வாக்களிப்பு இன்று (21) விளையாட்டு அமைச்சின் டங்கன் வைட் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, தலைவர் பதவிக்காக போட்டியிட்ட ஷம்மி சில்வா 83 வாக்குகளை பெற்றதோடு, அப்பதவிக்காக போட்டியிட்ட, ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையே பெற்றுக்கொண்டார். அதற்கமைய 27 மேலதிக வாக்குகளால் ஷம்மி சில்வா தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

உபதலைவர்களாக, 82 வாக்குகளைப் பெற்ற ரவீன் விக்ரமரத்ன மற்றும் 80 வாக்குகளை பெற்ற கே. மதிவாணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை உப தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க 72 வாக்குகளை பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.

செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட மொஹான் டி சில்வா 91 வாக்குகளைப் பெற்று அப்பதவிக்கு தெரிவானதோடு, 45 வாக்குகளை பெற்ற நிஷாந்த ரணதுங்க தோல்வியை தழுவியுள்ளார். 

Thu, 02/21/2019 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை