வட,கிழக்குக்கு தமிழ் பேசும் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது

காரைதீவு பிரதி தவிசாளர் ஜாஹிர்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழியிலேயிலேயே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண கூடிய மகத்தான வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக காரைதீவு பிரதேச சபையின் பிரதி தவிசாளர்  ஜாஹிர் தெரிவித்தார்.  கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை அம்பாறை மாவட்ட செயலகத்தில் சந்தித்து பேசிய போதே தெரிவித்துள்ளார்.  அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சிறுபான்மை இனங்களை சேர்ந்த ஆளுனர்களை நியமித்துள்ளார். சிறுபான்மை இன மக்களை மதித்து ஆளுநர்களை நியமித்த   ஜனாதிபதியாக அவரை காண்கின்றேன். தமிழ் மொழியிலேயே பேசி தமிழ் மொழியிலேயே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்கின்ற சந்தர்ப்பம் முதல் தடவையாக தமிழ் பேசும் மக்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது. 

 கிழக்கு மாகாண ஆளுநராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு இருப்பதன் மூலம் கிடைக்க உள்ள நன்மைகளை சில தமிழ் தரப்புகள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து  அபிவிருத்திகளை பெற்று தந்தவர்.எனவே இவரின் நியமனம் கிழக்கின் மூவின மக்களுக்கும் கிடைத்த  வரப்பிரசாதம் ஆகும். 

(மாளிகைக்காடு குறூப், கல்முனை மத்திய, அம்பாறை மாவட்ட குறூப், பெரியபோரதீவு விசேட நிருபர்கள்) 

Wed, 01/23/2019 - 12:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை