அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஆபிரிக்க – இந்தியப் பெண் போட்டி

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட கலிபோர்னியாவைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியானால், அந்தப் பொறுப்பை ஏற்கும் முதல் இந்திய, ஆபிரிக்க–அமெரிக்க பிண்ணனியைக் கொண்டவர் என்ற பெருமையை அவர் பெறுவார். அவரது தந்தை ஜமைக்காவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றவராவார். தாயார் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர். 

2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனத்தைப் பெற செனட்டர் ஹாரிஸ் போட்டியிடுவார். 

ஹவாய் மாநிலத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துல்சி கபார்ட், முன்னாள் வீடமைப்பு அமைச்சர் ஜூலியன் கேஸ்ட்ரோ முதலானோரும் அந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பம் தெரிவித்துள்ளனர்.  

கலிபோர்னியா மாகாணத்தின் செனட்டராக கடந்த 2016ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவியையும் கமலா வகித்துள்ளார்.     

Wed, 01/23/2019 - 14:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை