இறுதிப்போட்டியில் கிவிட்டோவா

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெட்ரோ கிவிட்டோவா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

கிராண்ட்சலாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

நேற்றுக் காலை நடந்த பெண்கள் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக்குடியரசைச் சேர்ந்த 8-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிட்டோவா - டேனிலி ரோஸ் கோலின்ஸ் (அமெரிக்கா) மோதினார்கள்.

இதில் கிவிட்டோவா 7-6 (7-2), 6-0 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். 2 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்திரேலிய பகிரங்கத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார்.

கிவிட்டோவா இறுதிப் போட்டியில் பிளிஸ்கோவா (செக்குடியரசு) அல்லது ஒசாகாவுடன் (ஜப்பான்) மோதுகிறார்.

Fri, 01/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை