வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கடமை பொறுப்பேற்பு

RSM
வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கடமை பொறுப்பேற்பு-NPC Governor Assumed Duty

வடமாகாணத்தின் முதலாவது தமிழ் ஆளுராக  ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று (09) யாழ்ப்பாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (09) காலை 10 மணியளவில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் பொன்னாலை போர்த்தி கெளரவிக்கப்பட்டதுடன் ஆளுநர் அலுவலக உத்தியோகத்தர்கள் தாம்புலம் வழங்கி வரவேற்றனர்.

வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கடமை பொறுப்பேற்பு-NPC Governor Assumed Duty

அதனை தொடர்ந்து சர்வமத ஆசி வழிபாடுகளை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தனது கடமைகளை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றார்.

அதன்பின்னர் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற்றது.

ஆளுநரின் பதவியேற்பு நிகழ்வில்,  இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்தர், 5 மாவட்ட அரசாங்க அதிபர்கள், வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், வடமாகாண பிரதம செயலாளர்,  வடமாகாண சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா உட்பட முப்படை அதிகாரிகள், யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு ஆளுநருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)

Wed, 01/09/2019 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை