ஒருநாள் அரங்கில் வரலாறு படைத்த திசர பெரேராவின் சாதனைத் துளிகள்

நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேராபல்வேறுசாதனைகளைதன் வசப்படுத்தியுள்ளார். நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடி கொலின் மன்ரோ (87),ரொஸ் டெய்லர் (90),ஜேம்ஸ் நீஷம் (64) ஆகியோரது அரைசதங்களினால் 50 ஓவர்களில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்துவிளையாடிய இலங்கைஅணி 112 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வலுவானநிலையிலிருந்து 27ஆவது ஒவரில் 128 ஓட்டங்களுக்கு 7 என்றுசரிந்தது. இத்தோடு இலங்கை அணியின் கதைமுடிந்தது என்று எண்ணியபோது சிக்ஸர் அடிப்பதற்கே பிறந்தது போல நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை திணறடித்த திசரபெரேராதன் வாழ்நாளின் ருத்ர தாண்டவ ஒருநாள் இன்னிங்ஸை ஆடினார். 28ஆவது ஓவரில் ஆரம்பித்ததிசரவின் அதிரடிஆட்டமும் சிக்ஸர் மழையும் 47ஆவது ஓவரில்தான் முடிந்தது.

எப்படிப் போட்டாலும் அடிக்கிறான் என்று நியூசிலாந்து பந்து வீச்சாளர்களை மிரளும் அளவுக்கு வெளுத்து வாங்கிய திசரபெரேரா, 57 பந்துகளில் சதம் கடந்து, மொத்தம் 13 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் உள்ளடங்கலாக 140 ஓட்டங்களைவெளுத்துக் கட்டினார். கூடவே நியூசிலாந்து களத்தடுப்பாளர்களுக்கு 6 தடவைகள் பிடியெடுப்புகொடுத்தும் அவர்கள் அதைத் தவறவிட்டனர். கடைசிவிக்கெட்டாக ஹென்றி பந்துவீச்சில் போல்ட்டின் அதியற்புத பிடியெடுப்புக்கு திசரபெரேரா வெளியேற இலங்கை அணி 46.2 ஓவர்களில் 298 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தொடரை இழந்தது. திசரவின் இந்த ருத்ரதாண்டவம் நியூசிலாந்துக்கு புயலடித்து ஓய்ந்ததுபோல இருந்திருக்கும் என்றால் மிகையாகாது.

ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதை இந்தகட்டத்தில் திசரபெரேரா உணர்ந்திருக்கலாம். ஏன் அவரைத் தவிர அணியில் விளையாடிய எந்தவொரு வீரரும் ஒரு சிக்ஸும் அடிக்கவில்லை என்பது மற்றுமொரு சுவாரஸ்யமாகும்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 5 சிக்ஸர்களை ஒரே ஓவரில் விளாசிய ஜெம்ஸ் நீஷம், 2ஆவது ஒருநாள் போட்டியிலும் 37 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 64 விளாச, அதற்குபதிலடிகொடுக்கும் வகையில் திசர பெரேராவின் திகைக்கவைக்கும் அதிரடி ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. சிக்ஸர்கள் மழை மவுண்ட் மங்குனியை நனைத்திருந்து என்றால் மிகையாகாது.

3 போட்டிகளைக் கொண்டஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணிக்கு திசர பெரேராவின் அபாரமான அதிரடிக்கு அவருக்கு கிடைத்த ஆட்டநாயகன் விருதுதான் ஒரே ஒரு ஆறுதலைக் கொடுத்திருந்தது. இதேநேரம்,இந்தசதத்தின் மூலம் இலங்கைஅணியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரராக ஒருசில சாதனைகளை திசர பெரேரா நிகழ்த்தியுள்ளார்.

இதுவரை 147 ஒருநாள் போட்டிளில் விளையாடியுள்ள 29 வயதுடையதிசரபெரேரா, 9 அரைச்சதங்களைமாத்திரம் குவித்திருந்த நிலையில்,நியூசிலாந்துடனான போட்டியில் ஒருநாள் அரங்கில் 2000 ஓட்டங்கள் மைல்கல்லை கடந்தார். நியூசிலாந்துக்குஎதிராக 28 பந்துகளில் அரைச்சதமும், 57 பந்துகளில் அதிவேகசதமும் அடித்து,தனதுகன்னிஒருநாள் சதத்தைப் பூர்த்திசெய்தார்.அத்துடன், இலங்கை சார்பாக ஒருநாள் அரங்கில் 3ஆவது அதிவேகசதத்தைப் பதிவுசெய்த திசரபெரேரா, 13 சிக்ஸர்களை அடித்து இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்டவீரரான சனத் ஜயசூரியா, 1996ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த 11 சிக்ஸர்கள் என்ற சாதனையை 23 வருடங்களுக்குப் பிறகு முறியடித்து புதிய இலங்கை ஒருநாள் சாதனையும் படைத்தார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கை அணிவீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்கள் பட்டியலில் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவுடன் இணைந்து கொண்டார்.

அத்துடன், சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த நான்காவது வீரராகவும் அவர் இடம்பிடித்தார். இதற்குமுன் இந்தியாவின் ரோஹித் சர்மா,தென்னாபிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் ஆகியோர் தலா 16 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்தனர்.

ரோஹித் சர்மா (இந்தியா) - 16 சிக்ஸர்கள் (2013 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக)

ஏபிடிவில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) – 16 சிக்ஸர்கள் (2015 மேற்கிந்தியாவுக்கு எதிராக), கிறஸ் கெயல் (மேற்கிந்தியதீவுகள்) – 16 சிக்ஸர்கள் (2015 சிம்பாப்வேக்கு எதிராக), ஷேன் வொட்சன் (அவுஸ்திரேலியா) – 15 சிக்ஸர்கள் (2011 பங்களாதேஷூக்கு எதிராக), கோரிஅண்டர்சன் (நியூசிலாந்து) – 14 சிக்ஸர்கள் (2014 மேற்கிந்தியாவுக்கு எதிராக), திசரபெரேரா (இலங்கை) – 13 சிக்ஸர்கள் ( 2019 நியூசிலாந்துக்கு எதிராக), ஒருநாள் போட்டிகளில் 7ஆம் இலக்க வீரராகக் களமிறங்கி அதிக ஓட்டங்களைக் குவித்தவீரர்களில் 3ஆவது இடத்தையும் திசரபெரேராபெற்றுக் கொண்டார். லுக்கிரொன்கி (நியூசிலாந்து) - 170 ஓட்டங்கள் (2015 இலங்கைக்கு எதிராக), மார்கஸ் ஸ்டொய்னிஸ் (அவுஸ்திரேலியா) – 146 ஓட்டங்கள் (2017 நியூசிலாந்துக்கு எதிராக), திசரபெரேரா (இலங்கை) – 140 ஓட்டங்கள் (2019 நியூசிலாந்துக்கு எதிராக), மஹேந்திரசிங் டோனி (ஆசிய பதினொருவர்) – 139 ஓட்டங்கள் (2007 ஆபிரிக்க பதினொருவர் அணிக் கெதிராக)

ஒருநாள் போட்டிகளில் ஓவர் ஒன்றுக்கு அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் திசர பெரேரா இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஹேர்ஷல் கிப்ஸ் (தென்னாபிரிக்கா) – 36 ஓட்டங்கள், திசர பெரேரா (இலங்கை) – 35 ஓட்டங்கள்ஏ, பிடி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) – 34 ஓட்டங்கள் ஜேம்ஸ் நீஷம் (நியூசிலாந்து) – 34 ஓட்டங்கள்ச, ஹீட் அப்ரிடி (பாகிஸ்தான்) – 32 ஓட்டங்கள் ஜேம்ஸ் பிரேன்க்ளின் (நியூசிலாந்து) – 31 ஓட்டங்கள், சனத் ஜயசூரிய (இலங்கை) – 30 ஓட்டங்கள்.

ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக அதிவேகமாக சதமடித்த 3ஆவது வீரராக இடம்பிடித்த திசர பெரேரா, சர்வதேச அரங்கில் 18ஆவது அதிவேகசதம் பெற்றவீரராகவும் இணைந்து கொண்டார்.

(பீ.எப் மொஹமட்)

Tue, 01/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை