மக்கள் சேவைக்காக வடமாகாண புதிய ஆளுநருடன் கைகோர்ப்போம்

கட்சி பேதங்கள் கடந்து வட  மாகாண புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்பட தயாராகவிருப்பதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

வடக்கின் புதிய ஆளுநராக தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி சுரேன் ராகவன் இன்று(9) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

யாழ்ப்பாணம், பழைய பூங்கா வளாகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இம்முறை தாய்மொழியை பேசக்கூடிய, தாய்மண்ணை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் ஆளுநராக பதவியேற்றுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

மக்கள் தந்த ஜனநாயக உரிமையை அரசியல் கட்சிகள் என்ற நிலைப்பாட்டை கடந்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே எமது நோக்கம்.அதற்கமைய புதிய ஆளுநருடன் ஒற்றுமையாகக் கைக்கோர்த்து செயற்படவும் தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

(புங்குடுதீவு குறுப் நிருபர்-பாறுக் ஷிஹான்)

Wed, 01/09/2019 - 16:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை