ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சி பலமாகிறது

ஜனாதிபதி தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுதி பெற்று வருகின்றது. இக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் சிறுபான்மை கட்சிகள் உட்பட மற்றும் பல கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிடவுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரின் முனைப்புடன் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சு.க பொதுச்செயலாளரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.  

பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதையடுத்து குருநாகல் மாவட்ட கட்சி ஆதரவாளர்களினால் குருநாகல் நகரில் அளிக்கப்பட்ட வரவேற்பு வைபவத்தில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இங்கு மேலும் கருத்து வெளியிட்ட தயாசிரி ஜயசேகர எம். பி. , எதிர்வரும் தேர்தல்களை வெற்றிகொள்வதற்கான வியூகங்கள் பற்றி நாம் உடனடியாக கரிசனை கொள்ள வேண்டியுள்ளது. கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தல்களுக்கு முகம் கொடுக்க நாம் தயாராகி வருகிறோம்.ஐ.தே.கட்சியின் ஆட்சி இன்னும் சில மாதங்களில் நிறைவு பெறும்.

அடுத்து வரும் சகல தேர்தல்களில் நாம் வெற்றியீட்டுவோம்.   ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கிளைகளை புனரமைப்பு செய்யும் நடவடிக்கை தொடரப்படுகின்றன.கட்சி ஆதரவாளர்களை ஒன்றிணைத்து எமது பயணத்தை தொடரவுள்ளோம்.இந்நடவடிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த சில வாரங்களாக துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

(குளியாப்பிட்டி தினகரன் நிருபர்)  

 

Tue, 01/08/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை