காயமுற்ற மெத்திவ்ஸுக்கு பதில் சதீர சமரவிக்கிரம

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான ஒருநாள் குழாமிற்கு இளம் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான சதீர சமரவிக்கிரம அழைக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டத்தின் போது துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்த அஞ்சலோ மெத்திவ்ஸ் உபாதை காரணமாக இடை நடுவில் வெளியேறினார். பரிசோதனைகளின் போது இது இரண்டாவது வகை ஹம்ஸ்ட்ரிங் உபாதை என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டதுடன் மெத்திவ்ஸ் 4 வாரங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணியுடனான மீதமுள்ள ஒருநாள் மற்றும் ரீ 20 தொடர்களிலிருந்து மெத்திவ்ஸ் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்தே ஒழுக்க மாற்றீடாக சதீர சமரவிக்கிரம மீண்டும் ஒருநாள் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 6.30 க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(azaff Mohamed)

 

Tue, 01/01/2019 - 12:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை